புதுச்சேரி மத்திய சிறையில் நடத்திய சோதனையில் 3 செல்போன் பறிமுதல்

புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
புதுச்சேரி மத்திய சிறையில் நடத்திய சோதனையில் 3 செல்போன் பறிமுதல்
x

விசாரணை கைதி மீது வழக்கு 

புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள், மொபைல் போன் பயன்படுத்துவதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறை காவலர்கள், கைதிகள் அறையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விசாரணை கைதி மங்கலம் அறிவழகனிடம் இருந்து ஒரு செல்போனும் மற்றும் அறையில் பதுக்கி வைத்திருந்த 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர்  கோபிநாத், காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் அறிவழகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
--


Next Story

மேலும் செய்திகள்