"மாநில அரசுகளுக்கு உரிமையில்லை" - மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் குறைந்துள்ளதாக வடகிழக்கு மாநில மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையை, தங்களது அரசியல் ஆதாயத்துக்காக சிலர் பயன்படுத்த முயற்சி செய்கின்றனர் என்றும், காங்கிரஸ் கட்சி அதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு மேற்கொள்ளும் முடிவுகளில் சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு, மாநில அரசுகளுக்கு உரிமை கிடையாது என்றும் கூறினார். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், சோனியா காந்தியை விடவும், இந்தியாவை குறித்து அதிக அக்கறை கொண்டவர்கள் என்றும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
Next Story