மக்களவையில் எதிரொலித்த உன்னாவ் விவகாரம் : காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு

உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரால் பாலியல் தொல்லைக்கு ஆளான 23 வயது பெண் நேற்று நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் உயிரோடு எரிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மக்களவையில் எதிரொலித்த உன்னாவ் விவகாரம் : காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு
x
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரால் பாலியல் தொல்லைக்கு ஆளான 23 வயது பெண் நேற்று நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் உயிரோடு எரிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை இன்று காங்கிரஸ் கட்சி, மக்களவையில் பிரச்சினையாக எழுப்பியது. 95 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணிற்கு நியாயம் என்ன? என காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார். ஒருபுறம் ராமருக்கு கோயில் கட்டும் அதே நிலையில், மறுபுறம் சீதையின் மகள்கள் கொளுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார். இந்த ஆட்சியில் குற்றவாளிகள் மிகுந்த தைரியத்துடன் நடமாட எங்கிருந்து தைரியம் வருகிறது என்று கேள்வி எழுப்பினார். உன்னாவ் சம்பவத்தை கண்டித்து, இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்