சிறையில் ப.சிதம்பரத்துடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு
டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா சந்தித்தனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு தொடர்ந்து வழக்கில் ப.சிதம்ரபததின் ஜாமீன் மனு டெல்லி உயர் நீதிமன்ற்ததில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மேல்முறையீட்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேறு வழக்கில் ஆஜராவதால் விசாரணையை ஒத்திவைக்குமாறு அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து ப.சிதம்ரத்தின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், திகார் சிறையில் இருக்கும் சிதம்பரத்தை ராகுல்காந்தி, பிரியங்கா இருவரும் சந்தித்து பேசினர்.
Next Story