"தமிழகத்தில் பாலில் அதிக நச்சுத்தன்மை" - நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நச்சுத்தன்மை உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாலில் அதிக நச்சுத்தன்மை - நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்
x
தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நச்சுத்தன்மை உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார். மக்களவையில், தி.மு.க. எம்.பி.  டி.ஆர்.பாலு பாலில் நச்சுத்தன்மை கலந்திருப்பதாக எழுப்பியிருந்த கேள்விக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே இவ்வாறு பதிலளித்தார். தமிழகம் கேரளா டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பாலில் அஃப்லா டாக்சின் எம்.ஒன் (Aflatoxin M1) என்ற நச்சுத்தன்மை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது என அமைச்சர் தெரிவித்தார். 

குறிப்பாக நச்சுத் தன்மை அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், அங்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை கொண்டு உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில், இது கண்டறியப்பட்டதாக கூறினார். தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட 551 மாதிரிகளில் 88 மாதிரிகளில் இந்த நச்சுத்தன்மை அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். அதேபோல கேரளாவில் இருந்து சேகரிக்கப்பட்ட 187 மாதிரிகளில் 37 மாதிரிகளில் நச்சுத் தன்மை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்