ப.சிதம்பரத்திடம் விசாரணை - அமலாக்கத் துறைக்கு அனுமதி

திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இன்றும், நாளையும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
ப.சிதம்பரத்திடம் விசாரணை - அமலாக்கத் துறைக்கு அனுமதி
x
ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப. சிதம்பரத்திடம் மேலும் 2 நாட்கள் விசாரணைக்கு அனுமதி கோரி, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் குஹார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திஹார் சிறையில் உள்ள  ப. சிதம்பரத்திடம் 22 மற்றும் 23 ஆகிய இருநாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.  இதனையடுத்து இன்றும், நாளையும் சிறையில் உள்ள சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். 

இதனிடையே, அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி, உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் தாக்கல் செய்த மனு, வரும்  26-ஆம் தேதி, விசாரணைக்கு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்