"சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க கூடாது" - கேரள எதிர்கட்சி தலைவர் சென்னிதாலா வலியுறுத்தல்
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காவல்துறையை பயன்படுத்தி சபரிமலைக்கு பெண்களை அழைத்து செல்ல கேரள அரசு முயற்சிக்க கூடாது என கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காவல்துறையை பயன்படுத்தி சபரிமலைக்கு பெண்களை அழைத்து செல்ல கேரள அரசு முயற்சிக்க கூடாது என கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். ஐயப்பன் மீது உண்மையான பக்தி கொண்ட எந்த இளம்பெண்ணும் அங்கு செல்லமாட்டார் என்றும், பக்தர்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்றும் சென்னிதாலா குறிப்பிட்டார்.
Next Story