ரபேல் ஒப்பந்த தீர்ப்பு - மறு சீராய்வு மனுக்கள் தள்ளுபடி
ரபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி இருந்தது. இது தொடர்பாக யஸ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷன், அருண் ஷோரி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி, ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் தவறு ஏதும் நடைபெறவில்லை என வழக்கை தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கியது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story