"அறிவியல் திருவிழா : பிரதமர் மோடி பெருமிதம்"
அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் இல்லாமல் எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது என கூறிய பிரதமர் மோடி, பல விஞ்ஞானிகளை இந்தியா உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிஸ்வ பங்களா கன்வென்ஷன் சென்டர் மற்றும் கொல்கத்தா அறிவியல் நகரம் ஆகிய இடங்களில் வரும் 8 ம் தேதி வரை நடைபெறும் 5- வது சர்வதேச இந்திய அறிவியல் திருவிழாவை, பிரதமர் நரேந்திரமோடி, புதுடெல்லியில் இருந்து காணொலி மூலம் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தற்போதைய தலைமுறையினரும் அறிவியலில் ஆர்வம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்காலம் குறித்து, நமது கடமை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி, அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் மத்திய அரசு உதவி வழங்கும் என உறுதி அளித்தார். விழாவில், மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மத்திய அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story