மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது யார்?
பாஜக கூட்டணியில் இருந்து விலகினால், சிவசேனாவை ஆதரிக்க, சோனியாவும், சரத்பவாரும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹாராஷ்டிராவில், தேர்தல் முடிவு வெளிவந்து, 12 நாட்களுக்கு மேலாகியும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. ஆட்சியில் சம பங்கு - சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி என, சிவசேனா தொடர்ந்து பிடிவாதம் பிடிப்பதால், தாமதம் நிலவுகிறது.மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பாஜக தனித்து 105 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு R.S.P, J.S.S, B.V.A, PWPI மற்றும் 7 சுயேட்சைகள் ஆதரவு என இக்கூட்டணியின் பலம் 118 ஆக உள்ளது.
56 இடங்களை பிடித்த சிவசேனாவுக்கு, P.J.P , K.S.P., மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் 6 பேர் ஆதரவுடன் அக்கூட்டணி 65 இடங்களை வைத்துள்ளது.காங்கிரஸ் - 44 , தேசியவாத காங்கிரஸ் - 54 மற்றும் இதர கட்சிகள் ஆதரவுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 99 இடங்களை பிடித்துள்ளது.இதுதவிர, இதர கட்சிகள் சார்பில், 6 உறுப்பினர்கள் உள்ளனர்.எனவே, ஆட்சி அமைக்க 145 உறுப்பினர்கள் தேவை.
Next Story