சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு - டெல்லி உயர் நீதிமன்றம்
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ப.சிதம்பரத்தின் உடல் நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எய்ம்ஸ் மருத்துவ குழு அறிக்கை மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தாவின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டார். மேலும் சிறையில் சிதம்பரத்துக்கு கொசு வலையும் மாஸ்கும் வழங்கவும், மூன்று வேளை வீட்டு உணவு வழங்க உத்தரவிட்டார். மேலும் வாரம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து புறநோயாளியாக அவருக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, தனியாக மருத்துவமனையில் அனுமதித்து சிறப்பு சிகிச்சை அளிக்க தேவை இல்லை என்றும் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தார்.
Next Story