கர்நாடக மாநிலம் உருவான 64-ம் ஆண்டு தினம் : முதல்வர் எடியூரப்பா கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார்

கர்நாடகாவின் 64 வது உதய தினத்தையொட்டி அம்மாநில முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் கர்நாடக மாநிலக் கொடியை ஏற்றி, நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உருவான 64-ம் ஆண்டு தினம் : முதல்வர் எடியூரப்பா கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார்
x
கர்நாடக தனி மாநிலமாக உருவாகி இன்றுடன் 64 ஆண்டுகள் ஆகிறது. ஒவ்வொரு ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி கர்நாடக மாநில உதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி, மாநில அரசு சார்பில் பெங்களூரில் மைதானத்தில் பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிகளை கர்நாடக முதல்வர் எடியூரப்பா அம்மாநில கொடியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இதனை அடுத்து பள்ளி மாணவ மாணவியர் கர்நாடக மாநிலக் கொடியை கையில் ஏந்தியவாறு அணிவகுப்பு நடத்தினார்கள். பின்னர் கர்நாடக மாநில பாரம்பரியத்தை போற்றும் வகையிலான பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் கர்நாடக உதய தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.



Next Story

மேலும் செய்திகள்