ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய ராணுவம் பதிலடி

காஷ்மீரில் உள்ள டங்தார் செக்டார், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், இந்த தாக்குதல் நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய ராணுவம் பதிலடி
x
காஷ்மீரில் உள்ள டங்தார் செக்டார், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், இந்த தாக்குதல் நடைபெற்றது. தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவுவதற்கு உதவி செய்யும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், பொது மக்கள் ஒருவரும் கொல்லப்பட்டார். 3 பேர் காயமடைந்துள்ளனர்.அங்குள்ள வீடு மற்றும் அரிசி ஆலை உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்துள்ளன. எல்லையோர மக்கள் வளர்த்து வந்த ஆடு மாடுகளும் தாக்குதலுக்கு தப்பவில்லை. இந்த நிலையில், அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்தியாவில் தாக்குதலில், நீலம் பள்ளத்தாக்கில் உள்ள 4 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 5 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்