கல்கி ஆசிரமத்தில் 2-வது நாளாக சோதனை - ரூ.9 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்களும் பறிமுதல்

வரித்துறை அதிகாரிகளிள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கி குவித்துள்ளதற்கான ஆதாரம் சிக்கியதாக கூறப்படுகிறது.
கல்கி ஆசிரமத்தில் 2-வது நாளாக சோதனை - ரூ.9 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்களும் பறிமுதல்
x
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில் உள்ள  கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையை தொடங்கினர். அவர்கள் இரண்டாவது நாளாக இன்றும் சோதனையை தொடர்கின்றனர். இந்த சோதனையில் இதுவரை 33 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 24 கோடி ரூபாய் இந்திய ரூபாய் நோட்டுகள் என்றும்,  9 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, கென்யா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கல்கி ஆசிரமம் சார்பில் ஏராளமான பணம் முதலீடு செய்யப்பட்டது, தமிழகத்தில் மட்டும் 1000 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் சோதனையில் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. பக்தர்களிடமிருந்து பணம் வசூல் செய்து அதனை முறைகேடாக வெளி வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று முதலீடு செ​ய்துள்ளதும் விசாரணையில்  தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், பணத்தின்  அடிப்படையில், கிருஷ்ணா, அவரின் மனைவி மற்றும் ஆசிரம தலைமை செயல் அலுவலர் லோகேஷ் தாசாஜி  ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்