நவ. 18 -ல் கூடுகிறது, நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் 18 ம் தேதி கூடுகிறது.
நவ. 18 -ல் கூடுகிறது, நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
x
புதுடெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. அநேகமாக,  டிசம்பர் 13 ம் தேதி வரை, நாடாளுமன்ற கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது. பொருளாதார தேக்க நிலை, வேலை இல்லா திண்டாட்டம், தொழில்துறை பாதிப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எனவே நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதம் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்