சபரிமலை அருகே விமான நிலையம் அமைக்க மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் கேரளம்

சபரிமலை அருகே விமான நிலையம் அமைக்க கேரள அரசு எடுத்து வரும் முயற்சியை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
சபரிமலை அருகே விமான நிலையம் அமைக்க மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் கேரளம்
x
இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்து  ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். காலத்திற்கேற்ற நவீன வசதிகளை பக்தர்களுக்கு  உருவாக்குவதில்  கேரள அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 2017-ல் கேரள வருவாய் துறை செயலாளர் குரியன் தலைமையில் அமைக்கப்பட்ட நால்வர் குழு, செறுவள்ளி தோட்டத்தை தேர்வு செய்து பரிந்துரை செய்தது. இந்த இடம் சபரிமலையிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் எருமேலி அருகே உள்ளது.  கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான செறுவள்ளி ரப்பர் தோட்டம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. ந​ஷ்டஈட்டை கட்ட கேரள அரசு தயாராகி வரும் நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அரசு அணுகினால், சபை தலைமை ஆலோசித்து முடிவெடுக்கும் என  செறுவள்ளி தோட்டத்தை நிர்வகிக்கும் கிறிஸ்தவ சபையை சேர்ந்த சிஜோ பந்தப்பள்ளி தெரிவித்துள்ளார். இதனிடையே  விமான நிலையம் அமைப்பது தொடர்பாக பேசி,  கேரள அரசு மக்களை ஏமாற்றுவதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. கம்யூனிஸ்ட் அரசின் நடவடிக்கை கனவாக முடியுமா  அல்லது நனவாகுமா என்பது மத்திய அரசின் முடிவில் அமைந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்