ராக்கெட் அனுப்புவது இளைஞர்களின் பசியை போக்காது - ராகுல்காந்தி
நிலவுக்கு ராக்கெட் அனுப்புவது இந்திய இளைஞர்களின் பசியை போக்காது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்தார். இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாக கூறினார். 2 நாட்களில் ராக்கெட்டை விண்வெளியில் ஏவ முடியாது என்றும் அதற்கு பல ஆண்டுகள் ஆகும் ராகுல்காந்தி தெரிவித்தார்.இஸ்ரோவின் பலனை தற்போது பிரதமர் மோடி அரசு அனுபவிப்பதாக கூறிய ராகுல் காந்தி, நிலவுக்கு ராக்கெட் அனுப்புவது இந்திய இளைஞர்களின் பசியை போக்காது என்றும் கூறினார். ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்று கூறிய ராகுல்காந்தி , இதனால்தான் ரபேல் விமானத்தை நேரில் பெற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றதாகவும் தெரிவித்தார்.
Next Story