ரயில் நிலைய பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைப்பு? - குழு அமைக்க, நிதி ஆயோக் கடிதம்
நாட்டில் முதல் கட்டமாக 50 ரயில் நிலைய பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு, நிதி ஆயோக், ரயில்வே வாரியத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் பிளான்ட், ரயில்வே வாரிய தலைவர் யாதவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ரயில்வே அமைச்சரிடம் நடத்திய ஆலோசனையின் பேரில், முதற்கட்டமாக 50 ரயில் நிலையங்களை உலகத் தரமிக்க வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் 6 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டதை கருத்தில் கொண்டு ரயில்வே நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தையும் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து குழு அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பரிசீலித்து ரயில்வே அமைச்சரின் உத்தரவை பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story