ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு : வேத மந்திரங்கள் முழங்க கொடி இறக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.
ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு : வேத மந்திரங்கள் முழங்க கொடி இறக்கம்
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 30-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் பெரிய சேஷம், சின்ன சேஷம்,  சிம்ம வாகனம் என பதினான்கு வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிகள் முக்கிய வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் கடைசி நாளை முன்னிட்டு கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர். இதையடுத்து வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சகர்கள் பிரம்மோற்சவ கொடியை  கீழே இறக்கினர். இத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. இதனிடையே, பிரம்மோற்சவத்தில் திருட்டு , குற்றசம்பவங்கள் இல்லாமல் அமைதியான முறையில் நடத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு ஏற்பாடு வெற்றி அடைந்துள்ளதாகவும், திருப்பதி மாவட்ட எஸ்பி அன்புராஜன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்