திருப்பதியில் பிரம்மோற்சவம் கோலாகலம் : எட்டாம் நாள் இரவு மலையப்பசாமி வீதியுலா

திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் இரவு மலையப்பசுவாமி பாயும் தங்க குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதியில் பிரம்மோற்சவம் கோலாகலம் : எட்டாம் நாள் இரவு மலையப்பசாமி வீதியுலா
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாக்கோலம் பூண்டுள்ள திருமலையில் மலையப்ப சாமி  தினந்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருமலையில் குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் நாள்தோறும் ஏழுமலையானை வழிபட்டு வருகின்றனர். பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் காலை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் மலையப்ப சாமிக்கு ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு மலையப்ப சுவாமி கல்கி அவதாரத்தில் பாயும் தங்க குதிரை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது  பக்தர்கள் பாரம்பரிய உடை அணிந்து கோலாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி ஏழுமலையானை வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்