நிலவின் மிக நெருக்கமான புகைப்படம் வெளியீடு

சந்திரயான் - 2 விண்கலம், நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை எடுத்து, அனுப்பி உள்ளது.
நிலவின் மிக நெருக்கமான புகைப்படம் வெளியீடு
x
சந்திரயான் - 2 விண்கலம், நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை எடுத்து, அனுப்பி உள்ளது. இந்த புகைப்படங்களை, இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டது. நிலவின் பல்வேறு பகுதிகளை, அடையாளப்படுத்தி, அறியும் வகையில், இந்த புகைப்படங்கள் தெளிவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. 100 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்களில், 14 கிலோ மீட்டர் நீளமும், 3 கிலோ மீட்டர் விட்டமும் கொண்ட போகஸ்லாவ்ஸ்கி பள்ளத்தின் ஒரு பகுதி, பதிவாகி இருக்கிறது. உயர் தெளிவு திறன் கொண்ட கேமிரா மூலம், இக்காட்சிகள், படம் பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நிலவின் தரைப்பகுதியில் மின்காந்த துகள்கள் இருப்பதை ஆர்ப்பிட்டர் கண்டுபிடித்ததாக இஸ்ரோ, தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்