"ஜம்மு- காஷ்மீரில் சிறப்பு அதிகாரம் ரத்தால் பாதிப்பில்லை" - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்ட பிறகு வன்முறை மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்ட பிறகு வன்முறை மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி புர்கான் வானி கொல்லப்பட்ட போது வன்முறை வெடித்து பலர் உயிரிழந்ததாகவும் கூறினார். சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு காஷ்மீரில் குழப்ப நிலை இருந்ததாகவும், மக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட உயர் காவல் அதிகாரிகள், பயங்கரவாதிகளால் மிரட்டப்பட்டதாகவும், பிரிவினைவாதிகளுக்கு எதிராக எழுதிய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். விடுமுறையில் வீடு சென்ற பாதுகாப்புபடை வீரர்கள் கடத்தி கொல்லப்பட்டதாகவும்
அவர் கூறினார்.
Next Story