"குற்றம் நிரூபிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதிகள் தகுதி நீக்கம்" : உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
குற்றம் நிரூபிக்கப்பட்டு 2 நாள் சிறை தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டு 2 நாள் சிறை தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்துள்ள மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 8-ன் உட்பிரிவு 3, செல்லாது என அறிவிக்கவும் அல்லது திருத்தம் செய்யவும் கோரியுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டு, 2 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது போல், மக்கள் பிரதிநிதிகளும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story