கார் விலையை குறைத்த மாருதி சுஸூகி நிறுவனம்
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி கார்களுக்கான விலையை 5 ஆயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது.
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி கார்களுக்கான விலையை 5 ஆயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பண்டிகை காலத்தை முன்னிட்டு கார்களின் விலையை குறைத்துள்ளதாகவும், இதனால் கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது. கார்ப்பரேட் வரியை 22 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ள நிலையில் மாருதி சுஸூகி நிறுவனம் கார்களின் விலையை குறைத்துள்ளது முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த விலைகுறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
Next Story