சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு

டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்து பேசினர்.
x
டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்நிலையில், இருவரும் தம்மை வந்து சந்தித்ததை கவுரவமாக கருதுவதாக, சமூகவலைதள பக்கத்தில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.  காங்கிரஸ் கட்சி, தைரியமாகவும், வலிமையாகவும் இருக்கும் வரையில், தானும் தைரியமாகவும், வலிமையாகவும் இருப்பேன் என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். மேலும், வேலையின்மை, வேலையிழப்பு, ஊதிய குறைப்பு,  கும்பல் வன்முறை, காஷ்மீரில் அடக்குமுறை, எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைப்பு ஆகியவற்றைத் தவிர, நாட்டில் எல்லாமே சவுக்கியமாக உள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்