"போக்குவரத்து விதி மீறல் : அபராத தொகை குறைப்பு" - கர்நாடக அரசு அறிவிப்பு
கர்நாடகாவில் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகையை குறைத்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவில் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகையை குறைத்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம் திருத்தப்பட்டு, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி, போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுவோருக்கான அபராத தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த சட்டம் அமலுக்கு வந்த ஒரே வாரத்தில், கர்நாடகாவில், ஒன்றரை கோடி அளவுக்கு அபராத தொகை மூலமாக அரசுக்கு வருவாய் கிடைத்தது. இந்நிலையில், மத்திய அரசின் புதிய அபராத தொகையை முற்றிலுமாக குறைத்து குறைந்த அளவிலான புதிய அபராதத் தொகையை கர்நாடக அரசு கொண்டு வந்துள்ளது.
Next Story