"சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு" - அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கோவாவில் நடைபெற்ற 37-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பை அறிவித்தார்.
சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
x
கடல்சார் எரிபொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 
5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக  மத்திய நிதியமைச்சர் நிர்மலா 
சீதாராமன் அறிவித்தார் .

வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்படுவதாகவும் ,  சமையல்  உலர் புளிக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரி முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். 

ஓட்டல், விடுதி தினசரி வாடகை 1000 ரூபாயாக இருந்தால் ஜிஎஸ்டி கிடையாது என்றும் 1,001 ராபாயில் இருந்து 7,500 ரூபாய்  வரை வாடகை உள்ள ஓட்டல், விடுதி அறைகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 7.500 ரூபாய்க்கு மேல் வாடகை உள்ள ஓட்டல்களுக்கு ஜிஎஸ்டி வரி  28 சதவீதத்தில் இருந்த 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

உள்நாட்டில் தயாரிக்கப்படாத பாதுகாப்பு உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி  ரத்து செய்யப்படுவதாகவும்,  ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் 
வெள்ளி பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.  

குளிர்பானங்கள், டீ, காபிக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்,  புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு  நடைமுறை  வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும்
அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்