விக்ரம் லேண்டர் ஆயுள்காலம் நாளை முடிவு
நிலவில் தரையிறங்கி, ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம், நாளையுடன் முடிகிறது.
நிலவில் தரையிறங்கி, ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம், நாளையுடன் முடிகிறது. நாளை முதல்,14 புவி இரவுகள், நிலவின் தென் பகுதியில் துவங்க உள்ளதாகவும், அந்த சமயத்தில் நிலவில் உறை வெப்பநிலை மைனஸ் 240 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக இருக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது. இத்தகைய அதீத குளிர் வெப்ப நிலையில், எலக்ட்ரானிக் பொருட்களான லேண்டர் விக்ரம் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியனை பாதிப்படையும். விக்ரமின் இயந்திர பாகங்கள் சேதமடைந்து, அதன் சோலார் திறன் இழக்கும் சூழலில், ஆர்பிட்டர் நன்றாக இயங்கி வருகிறது. எனவே, தொடர்ந்து நிலவை சுற்றி பயணித்து, ஆர்ப்பிட்டரின் ஆய்வு தொடரும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Next Story