சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர் : செப். 30 வரை காவலை நீட்டிக்க கோரிக்கை

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர் : செப். 30 வரை காவலை  நீட்டிக்க கோரிக்கை
x
இன்று பிற்பகல் ப. சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரது தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், நீதிமன்ற காவலை நீட்டிக்க கோருவது இயந்திரத்தனமாக இருக்க கூடாது என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 3 ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முதலில் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் அக்டோபர் 3 ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த நீதிமன்ற காவல் நிறுத்தி வைத்தது. 

சிதம்பரத்திற்கு பல்வேறு உடல் நலக்குறைவு உள்ளதாகவும்,  சிறையில் நாற்காலி, தலையணை அளிக்கப்படவில்லை எனவும் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.  இந்த வாதத்தின்போது, கபில் சிபலின் புகாரை ஏற்க முடியாது என்றும், சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து தங்களுக்கும் அக்கறை உள்ளதாகவும் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார். இது குறித்த தீர்ப்பு சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்