புதிய மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு - டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுவதாக கூறி, அந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுவதாக கூறி, அந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தேசிய தலைநகர் டெல்லியில் பெரும்பாலான வாடகை ஆட்டோக்கள், கார்கள் இயக்கப்படவில்லை. இதனால் புதுடெல்லி ரயில்வே நிலையம், நிஜாமுதீன் ரயில்வே நிலையம், ஆனந்த விஹார் ரயில்வே நிலையம் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் பயணிகள் ஆட்டோக்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் பெரும்பாலும் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.
Next Story