"பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள்" - கர்நாடக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என கர்நாடக அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
பெங்களூருவில் பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே எஸ் ஈஸ்வரப்பா பங்கேற்றார். அதில் பேசிய அவர், பாஜக விற்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் அனைவரும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என விமர்சித்தார். தனது தொகுதியில் 55 ஆயிரம் இஸ்லாமிய வாக்காளர்கள் உள்ளதாகவும், அப்படி இருந்தும் 47 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றதாகவும் ஈஸ்வரப்பா கூறினார். சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால், அவர்களின் தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இஸ்லாமியர் வாக்கு இருப்பதால் தோல்வி பயத்தில் அவர்கள் இணைய மறுத்ததாகவும் அமைச்சர் ஈஸ்வரப்பா கூறினார். அமைச்சரின் பேச்சார், கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story