"இந்தி திணிப்பு : மு.க. ஸ்டாலின் - கமலுக்கு கண்டனம்" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி
"இந்தி திணிப்பு என ஊளையிடுவதா ?"
ஸ்டாலினும், கமல்ஹாசனும் இந்தி திணிப்பு என ஊளையிட்டு கொண்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், தமிழ்நாட்டில் இந்தி கற்பிக்கக்கூடாது என கூறி விட்டு,அவர்கள் திணிப்பதை என்னவென்று சொல்வது? என கேள்வி எழுப்பி உள்ளார். முதலில், இந்தியை 3- வது மொழியாக தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு கொடுக்கலாம் என அவர் யோசனை தெரிவித்துள்ளார். எந்த மொழியை தேர்வு செய்து கொள்வது என்பது மாணவர்களின் முடிவாக இருக்கட்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.
Moron Kamalahasan and DMK Chief Stalin are howling about imposition of Hindi. What about their imposition that no Hindi will be taught in TN? Let Hindi be an optional third language and the choice on which language to opt left to the student
— Subramanian Swamy (@Swamy39) September 16, 2019
Next Story