ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

பரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்த உத்தரவிட கோரி வைகோ தொடர்ந்த வழக்கு தொடர்பாக வரும் 30-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அதிகார  சட்டப்பிரிவு  ரத்து செய்யப்பட்டதையடுத்து முக்கிய  தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்த உத்தரவிடக்கோரி வைகோ தொடர்ந்த வழக்கு  உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜம்மு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும்,  பரூக் அப்துல்லாவை கைது செய்து, எங்கு வைத்துள்ளனர் எனத் தெரியவில்லை என்றும் வைகோ தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு வரும் 30-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜம்மு-காஷ்மீர் தொடர்பான பிற மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அங்கு இயல்பு நிலையை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளி, கல்லூரிகள் மருத்துவமனைகள் வழக்கமாக  இயங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.  உரிய போக்குவரத்து வசதி இல்லாததால் மருத்துவமனைகளுக்கும், விமான நிலையங்களுக்கும் செல்ல முடியவில்லை என்பதை ஏற்று கொள்ள முடியாது மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு -காஷ்மீர் தொடர்பான மனுக்கள் அனைத்தும் மீண்டும் வரும் 30ந்தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஸ்ரீநகர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனினும், அவர் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் காஷ்மீருக்கு தானே நேரில் செல்வேன் எனவும் வழக்கு விசாரணையின் போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்