ஆந்திராவில் அறநிலைய துறையில் மலைவாழ், தாழ்த்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீடு - ஆந்திர அரசு அறிவிப்பு
ஆந்திராவில் இந்து சமய அறநிலைத் துறை மற்றும் தேவஸ்தான கோவில்களில் உள்ள அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் இந்து சமய அறநிலைத் துறை மற்றும் தேவஸ்தான கோவில்களில் உள்ள அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இந்து அறநிலைத்துறை, தேவஸ்தானம், மாநகராட்சி ஆகியவற்றில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து திருப்பதி கோவிலின் அறங்காவலர் குழுவில் 50 சதவீதம் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
Next Story