"ஒரே மொழியாக இந்தி" - அமித் ஷா
ஒரே நாடு, ஒரே மொழி என்ற கோஷத்தை பாஜக முன்வைத்து வரும் நிலையில், ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே மொழி என்ற கோஷத்தை பாஜக முன்வைத்து வரும் நிலையில், ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா வெவ்வேறு மொழிகளை கொண்ட நாடு எனவும் ஒவ்வொரு மொழிக்கும் சொந்த முக்கியத்துவம் உண்டு எனவும் கூறியுள்ளார். ஆனால், முழுமையான தேசத்துக்கு ஒரு பொது மொழி இருப்பது முக்கியம் எனவும் அது, உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும் எனவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். ஒரு மொழியால் நாட்டின் ஒற்றுமையை கட்டமைக்க முடியும் என்றால் அது இந்தி மொழியாக இருக்கும் எனவும் இந்தி மொழிதான் அதிக மக்களால் பேசப்படும் மொழி எனவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Next Story