எல்லையில் 'ஹிம்விஜய்' என்ற பெயரில் போர் பயிற்சி - ராணுவம் திட்டம்

அடுத்த மாதம் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள இந்திய சீன எல்லையில் நடைபெற உள்ள போர் பயிற்சியின் போது, அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட எம்777 இலகுரக பீரங்கிகள், மற்றும் கனரக பொருட்களை சுமந்து செல்லக்கூடிய சினூக் ரக ராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்த ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எல்லையில் ஹிம்விஜய் என்ற பெயரில் போர் பயிற்சி - ராணுவம் திட்டம்
x
ஹிம்விஜய் என்ற பெயரில்  அடுத்த மாதத்தில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லையில் போர் பயிற்சியில் இந்திய ராணுவம் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ராணுவ பயிற்சியில், புதிதாக ஏற்படுத்தப்பட்ட 17 மலை தாக்குதல் படையினரை பயன்படுத்தவும், அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட எம்777 இலகுரக பீரங்கிகள் மற்றும் சின்னூக் என்ற கனரக பொருட்களை சுமந்து செல்லக்கூடிய ராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சியின் போது, மலை சூழ்ந்த எல்லைப் பகுதிகளில், மலை தாக்குதல் படையினரின் திறனை பரிசோதிக்கவும், புதிதாக வாங்கப்பட்ட பீரங்கிகளின் திறனை கண்டறியவும் ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதில் இந்திய விமானப்படையும் இணைந்து ஈடுபட உள்ளது. அனைத்து வகை போர் படையினரும் ஒருங்கிணைந்து இந்த பயிற்சியை மேற்கொள்ள உள்ளதால், இந்த போர் பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அடுத்த மாதம் சீன அதிபர் ஜி ஜின் பிங் இந்தியா வர உள்ள நிலையில், இந்த போர் பயிற்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்