சரணடைய விருப்பம் தெரிவித்த சிதம்பரத்தின் மனு மீது இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் - சிறப்பு நீதிமன்றம்

அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சரணடைய விருப்பம் தெரிவித்த சிதம்பரத்தின் மனு மீது இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் - சிறப்பு நீதிமன்றம்
x
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம்  தாக்கல் செய்த மனு, சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் தலைமையிலான பெஞ்சு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரத் தின் சிறைவாசத்தை நீட்டிக்காமல் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் கபில்சிபல் வாதிட்டார். அதேநேரம், சரணடைய விருப்பம் தெரிவித்த ப.சிதம்பரத்தின் மனு நிராகரிக்கப்பட வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வலியுறுத்தினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என  அறிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்