சந்திரயான் 2 - லாபமா..? நஷ்டமா ?

நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம் முழுமையான வெற்றியை உறுதிப்படுத்தாத நிலையில், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்திருக்கின்றன.
சந்திரயான் 2 - லாபமா..? நஷ்டமா ?
x
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நாட்டின் பல்வேறு தேவைகளுக்காக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. மேலும், வணிக நோக்கில் தனியார் செயற்கை கோள்கள் மற்றும் வெளிநாட்டு செயற்கை கோள்களையும் விண்ணுக்கு அனுப்பி வைக்கிறது. இந்த வணிக ரீதியான பணிகளை மேற்கொள்வதற்காக 'ஆண்ட்ரிக்ஸ் கார்பரேஷன்' எனப்படும் தனிப்பிரிவு இஸ்ரோவின் அங்கமாக உள்ளது. வணிக ரீதியில் செயற்கை கோள் அனுப்பும் பணிகளுக்காக பெரும் தொகை பெறப்படுகிறது. ஆண்ட்ரிக்ஸ் கார்பரேஷன் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் 239 செயற்கை கோள்களை வணிக ரீதியாக விண்ணில் செலுத்தி உள்ளது.

தனியார் நிறுவனங்கள் மற்றும் மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம், 2015 - 16 ஆம் ஆண்டில் 1794 கோடியும், 2016 - 2017 ஆம் ஆண்டில் 1872 கோடி ரூபாயும் 2017- 18 ஆம் ஆண்டில் 1932 கோடி ரூபாயும் வருவாயாக ஈட்டியுள்ளது இஸ்ரோ. மொத்தத்தில் ஏப்ரல் 2015 முதல் 2018 வரையிலான 3 ஆண்டுகளில் இஸ்ரோ 5600 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இந்த 3 ஆண்டுகளில் பல்வேறு விண்வெளி ஆராய்சித் திட்டங்களுக்காக 7209 கோடி ரூபாயை இஸ்ரோ செலவிட்டுள்ளது. ரிலையன்ஸ் உள்ளிட்ட பல தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் இஸ்ரோவின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களுக்கு செலவிடும் தொகையில் சரிபாதிக்கும் மேலாக இஸ்ரோ வருமானம் ஈட்டியுள்ளது.

இதனிடையே, இஸ்ரோவின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளை வணிக ரீதியாக செயல்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் முதல் 'நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்' (என்.எஸ்.ஐ.எல்.) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் இந்திய விண்வெளி திட்டத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவும், சர்வதேச விண்வெளி சந்தையை வணிக ரீதியாக பயன்படுத்திக்கொள்ளவும் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்