தென்னிந்தியாவில் நுழைந்திருக்கிறதா சர்வதேச போதை கும்பல்? - தமிழக உளவுத்துறைக்கு எச்சரிக்கை விடுத்த இண்டர்போல்

ஈராக் நாட்டைச் சேர்ந்த சர்வதேச போதை கும்பல் தென்னிந்தியாவில் நுழைந்து இருப்பதாக இண்டர்போல் அதிகாரிகள் தமிழக உளவுத் துறையை எச்சரித்துள்ளனர்.
x
* கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் ஈராக் நாட்டின் பாக்தாத்தில் உள்ள அல்-குவந்த் காவல் நிலையத்தில் இருந்து 12 குற்றவாளிகள் தப்பியுள்ளனர். 

* காவல்துறை அதிகாரிகளை கொடூரமாக தாக்கி விட்டு தப்பிய  அவர்களில் 2 முக்கிய குற்றவாளிகள், தென்னிந்தியாவில் நுழைந்துள்ளதாக இண்டர்போல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

* இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து எஸ்.பி. மற்றும் கமிஷனர்களுக்கும் குற்றவாளிகள் படத்துடன் முழு தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

* அல் லம்மி குஹாதான் மற்றும் அல் ஷாவய்லி சதீக் என்ற அந்த 2 பேரும் சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

* இவர்கள் 2 பேரை தவிர மற்றவர்கள் ஈராக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தப்பிய 2 பேருக்கும் எதிராக இண்டர்போல் அதிகாரிகள் ஆரஞ்ச் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.  

* தென்னிந்தியாவில் அவர்கள் நுழைந்திருப்பதாக எச்சரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்