அரிசி தேவை என நிறைவேற்றப்பட்ட தீர்மானம் : கிரண்பேடி ரத்து செய்து உத்தரவு - நாராயணசாமி வெளிநடப்பு
புதுச்சேரியில் ரேஷன் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசியும் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 10 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் ரேஷன் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசியும் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 10 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. இலவச அரிசிக்கு பதில் பணத்தை வங்கி கணக்கில் சேர்க்க வேண்டும் என ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டதால், கடந்த 6 மாதங்களாக இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
இதையடுத்து, ரேஷனில் அரிசி மட்டுமே வழங்குமாறு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆளுநரிடம் நேரில் வழங்குவதற்காக முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் சென்றனர். 20 நிமிட சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த முதல்வர் நாராயணசாமி, தங்கள் தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்து விட்டதால், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாக கூறினார்.
Next Story