சாதி மற்றும் மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் கேள்வித்தாள் போலியானது - மத்திய அரசின் கேந்திரியா வித்யாலயா பள்ளி விளக்கம்
சாதி மற்றும் மதம் தொடர்பாக தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் கேள்வி தாள் போலியானது என்று கேந்திரியா வித்யாலயா பள்ளி விளக்கம் அளித்துள்ளது.
சாதி மற்றும் மதம் தொடர்பாக தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் கேள்வி தாள் போலியானது என்று கேந்திரியா வித்யாலயா பள்ளி விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த கேள்வித் தாள் போலியானது என்றும், சென்னை மண்டலத்தில் உள்ள 49 கேந்திரியா வித்யாலயா பள்ளியில் இதுபோன்ற கேள்வித்தாள் தயாரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்பி யாரும் அதனை சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என்று கேந்திரியா வித்யாலயா குறிப்பிட்டுள்ளது.
Next Story