இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2-விலிருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர், நிலவை நெருங்கி வருகிறது

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 - விலிருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர், நிலவை நெருங்கி வருகிறது.
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2-விலிருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர், நிலவை நெருங்கி வருகிறது
x
இஸ்ரோவில் அனுப்பப்பட்ட சந்திரயான் 1 நிலவை சுற்றி வந்து தகவல்கள் அனுப்பியது. 21 நாட்களில் நிலவின் சுற்றுவட்ட பாதையை அடைந்தது. அதன் மொத்த எடை ஆயிரத்து 380 கிலோ ஆகும். இம்பாக்டர் கருவியை வெற்றிகரமாக தரையிறக்கிய சந்திராயன்-1 நிலவின் வேதியியல் மற்றும் கனிமவியல் தரவுகளை சேகரிப்பது, நீர் ஆதாரங்களை தேடுவது உள்ளிட்ட பணிகளுக்காக செலுத்தப்பட்டது. இதன் திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றினார். இதே போல் தற்போது அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் 2 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் மொத்த எடை மூன்றாயிரத்து 850 கிலோ ஆகும். இதில், விக்ரம், பிரக்யான் ஆகிய இரண்டு ஆய்வு கருவிகள் உள்ளன. நிலவின் 3D வரைபடத்தை உருவாக்கவும், நிலவின் தென் துருவத்தில் இருக்கும் பனிக்கட்டிகளை ஆய்வு செய்யவும் சந்திரயான் 2 அனுப்பப்பட்டுள்ளது. இதன் திட்ட இயக்குநர்கள் ரீது கரிதல் மற்றும் வனிதா ஆகிய இரண்டு பெண்கள் ஆவர். இதில் வனிதா தமிழகத்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் சிறப்பு. இதனை தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில் சந்திரயான் 3 -வை  நிலவிற்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜப்பான் உடன் இணைந்து செயல்பட்டு, நிலவில் இருந்து கற்களை பூமிக்கு கொண்டு வரவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்