ப.சிதம்பரத்துக்கு சிக்கல் ஏற்படுத்திய ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு - கடந்து வந்த பாதை
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான ஐ.என்.எஸ். மீடியா வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
2017, மே 17ம் தேதி, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக 305 கோடி ரூபாய் நிதி பெற்றதாக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
2017, ஜூன் 16ம் தேதி, வெளியுறவு மண்டல பதிவாளர் அதிகாரி மற்றும் குடியேற்றப்பிரிவு தரப்பில், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கியது.
2017, ஆகஸ்ட் 10ம் தேதி கார்த்தி சிதம்பரம் உள்பட 4 பேருக்கு எதிராக வழங்கப்பட்டு இருந்த லுக் அவுட் நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
2017 ஆகஸ்ட் 14ம் தேதி, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வழங்கப்பட்டு இருந்த லுக் அவுட் நோட்டீஸை நிறுத்தி வைத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
2017, ஆகஸ்ட் 18ம் தேதி, சிபிஐ முன் ஆகஸ்ட் 23-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
2017, செப். 22ம் தேதி வெளிநாட்டுக்கு கார்த்தி சிதம்பரம் செல்லக் கூடாது, அவருக்கு ஏராளமான வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் இருப்பதால், சாட்சியங்களை அழித்து விடுவார் என்று உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்தது.
2017, அக்.9ம் தேதி, பிரிட்டனில் உள்ள மகளைச் சந்திக்க அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.
2017, நவ.20ம் தேதி, கார்த்தி சிதம்பரம் பிரிட்டன் செல்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
2018, பிப். 28ம் தேதி கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, டெல்லிக்கு அழைத்துச் சென்றது.
2018, மார்ச் 23ம் தேதி, 23 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தது.
2018, ஜூலை 25ம் தேதி, ப.சிதம்பரத்தை கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
2018, அக்.11ம் தேதி, இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளி்ல ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கியது.
2019, பிப்.22ம் தேதி, ப.சிதம்பரத்தின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய மத்திய அரசிடம் இருந்து, சி.பி.ஐ. அனுமதி பெற்றது.
2019, ஜூலை 11ம் தேதி, ஐஎன்எஸ் மீடியா வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் இந்திராணி முகர்ஜி நீதிபதியிடம் அப்ரூபவராக மாறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
2019, ஆக.20ம் தேதி, ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி, ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அதே நாளில், ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பை முடித்து விட்டு, அவரது வீட்டில் வந்த போது, கைது செய்யப்பட்டார். அதிகாரிகள் அவரது வீட்டுச் சுவர் ஏறிக் குதித்து, சிதம்பரத்தை கைது செய்ததால், சர்ச்சை எழுந்தது.
ஆகஸ்ட் 22ம் தேதி, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், சி.பி.ஐ. காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டது.
செப்டம்பர் 5ம் தேதி, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி Ajay kumar Kuhar, ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19ம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story