வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்...

தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவற்றுக்கான வட்டி விகிதங்களை குறைக்க அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தி உள்ளது.
வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்...
x
தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவற்றுக்கான வட்டி விகிதங்களை குறைக்க அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ள ரிசர்வ் வங்கி, குறைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் அக்டோபர் 01 ஆம் தேதி முதல் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ரெபோ வட்டி விகிதங்கள் குறைத்துள்ள நிலையில், அதன் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி, இந்த வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.  குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் சிறு குறு நிறுவனங்களுக்கான தொழில்கடன் வழங்கவும் ரிசர்வ் வங்கி  அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்