5 - ந்தேதி வரை ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் - சிபிஐ காவலுக்கு எதிரான மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு
ஐந்தாம் தேதி வரை ப.சிதம்பரத்திற்கு, சிபிஐ காவல் தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில், சிபிஐ காவல், கைதுக்கு எதிராக ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிதம்பரத்தின் ஜாமின் மனுவை விசாரிக்குமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு அழுத்தம் தரப்பட்டதாக கூறினார். மேலும், 14 நாள்கள் கழித்து ஜாமின் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ப.சிதம்பரத்தின் மனு செப்.5 ஆம் தேதி விசாரிக்கப்பட்டால் பலனற்றதாகிவிடும் என்றும் தெரிவித்தார். அப்போது, சிபிஐ நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றால், ஜாமின் கோர மாட்டோம் என, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தனர். விசாரணையின் முடிவில், ப.சிதம்பரத்திற்கு, சிபிஐ காவல் தொடரும் என்றும் வருகிற 5-ம் தேதி வரை இதே நிலை நீடிக்கும் என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story