செப். 4, 5 தேதிகளில் ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி - இந்தியாவில் 6 அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம்
பிரதமர் நரேந்திர மோடி வருகிற நான்கு அல்லது ஐந்தாம் தேதி ரஷ்யாவிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஷ்யாவில் நடைபெறும் வருடாந்திர உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்று, அந்நாட்டு அதிபர் புதின் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த சந்திப்பின் போது, 6 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் 6 புதிய அணுஉலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story