10 வங்கிகள் 4 வங்கிகளாக மாற்றம் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

10 பொதுத்துறை வங்கிகள், 4 வங்கிகளாக மாற்றம் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
10 வங்கிகள் 4 வங்கிகளாக மாற்றம் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
x
10 பொதுத்துறை வங்கிகள், 4 வங்கிகளாக மாற்றம் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று மாலை, செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். எனவே, 27 வங்கிகளுக்கு பதிலாக இனி, 12 வங்கிகள் மட்டுமே செயல்படும் என்றும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

வங்கி இணைப்பு ஏன் ? : நிர்மலா சீதாராமன் விளக்கம்

 
வங்கிகள் ஒருங்கிணைப்புக்குப்பின் வங்கிகள், வாரியத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும், வங்கிகளின் பொது மேலாளர் பதவிக்கு மேலான பொறுப்புகளை வகிக்கும் அலுவலர்களின் பணித்திறனை மதிப்பிடுவதற்கு வங்கிகள் வாரியத்திற்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். பொதுத்துறை வங்கிகளை, சர்வதேச தரத்துக்கு மாற்றும் முயற்சியாகவும், வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகப்படுத்தவும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக
நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்