ஆசிரியர்களுக்கு மார்க் போடும் மாணவர்கள் - ஒடிசாவில் புதிய முறை அறிமுகம்
ஒடிசா மாநிலத்தில் ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கு மாணவர்கள் மார்க் போடும் புதிய முறை அறிமுகமாக உள்ளது.
ஒடிசா மாநிலத்தில், ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கு மாணவர்கள் மார்க் போடும் புதிய முறை அறிமுகமாக உள்ளது. ஒடிசா பள்ளிக் கல்வித்துறை கொண்டுவர உள்ள இந்த புதிய நடைமுறையில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கு மார்க் வழங்க உள்ளனர். ஆசிரியரின் செயல்பாடு மோசமாக உள்ளது என 30 சதவீத மாணவர்களுக்கு மேல் மதிப்பிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம், மாணவர்களுக்கு சிறப்பாக கற்பிக்க வேண்டும் என்கிற நோக்கம் ஆசிரியர்களுக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story