ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி அமர்வு அதிரடி உத்தரவு
ஐ,என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் டெல்லிய உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நிதிமன்றம், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு பட்டியல் இடப்படாததை நீதிபதி பானுமதி அமர்வு முன்பு சிதம்பரம் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் கபில்சிபல் சுட்டிக்காட்டினார். அதற்கு நீதிபதி பானுமதி, வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு தேவை என்றும், அது கிடைத்த உடன் தேவையான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கு 12 மணிக்கு நீதிபதி பானுமதி அமர்வு முன்வு விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் தரப்பில் கபில்சிபல் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி பானுமரி, சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க வேண்டுமா என கேள்வி எழுப்பினார். இதை வழக்கமான ஜாமின் மனுவாக கருத முடியாது என்றும், முன்ஜாமீன் ரத்துக்கு எதிரான மனுவை ஜாமீன் வழங்கக் கோரும் மனுவாக கருத முடியாது என்றும் நீதிபதி பானுமதி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வாதிட்ட மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, முன்ஜாமீன் தொடர்பான மனுக்கள் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் சிதம்பரத்தை கைது செய்திருக்க கூடாது என்றும், இந்த கைது நடவடிக்கையால்,அவருடைய உரிமைகள் மறுக்கப்பட்டு உள்ளதாகவும் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. காவலில் சிதம்பரம் உள்ள நிலையில், முன் ஜாமீன் மனு பலனற்றதாகிவிட்டதால் விசாரிக்க முடியாது என நீதிபதி பானுமதி மறுத்து, மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். உரிய நீதிமன்றத்தை அணுகி வழக்கமான ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story