மணிப்பூரில் ரூ.400 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் - 4 பேர் கைது

மணிப்பூரில் உள்ள தெளபால் மாவட்டத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் ரூ.400 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் - 4 பேர் கைது
x
மணிப்பூரில் உள்ள தெளபால் மாவட்டத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெளபால் காவல்துறை அதிகாரிகள் ரோந்தின் போது, சந்தேகத்துக்கு இடமான ஒரு வாகனத்தை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் 400 கோடி மதிப்பிலான 400 கிலோ போதை மருந்து பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, இது தொடர்பாக சர்வதேச அளவில் போதை மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் நபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்